புதிய சுவையில் ஜவ்வரிசி சர்க்கரை பொங்கல்.!
how to make javvarisi sugar pongal
தற்போது ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த மாதத்தில் வெள்ளி, செவ்வாய் உள்ளிட்ட நாட்களில் பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிடுவார்கள். அப்படி செய்யும் பொங்கலில் புதிய சுவையில் ஜவ்வரிசி பொங்கல் செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி
வறுத்த ரவை
பால்
வெல்லம்
நெய்
முந்திரி
திராட்சை

செய்முறை:
* ஒரு வாணலியில் ஜவ்வரிசியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊறி வெல்லத்தை சேர்ந்து பாகு செய்து எடுத்துக் கொள்ளவும்.
* இதையடுத்து ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அதில் ரவை மற்றும் வறுத்து வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்க்கவும்.
* இது கெட்டியான பதம் வந்தவுடன் எடுத்து வைத்த வெல்லப்பாகை அதில் ஊற்றி நன்கு கிளறி, பொங்கல் பதத்திற்கு வந்தவுடன் இறக்கி வைத்து விடவும். ஒரு தாளிப்பு கரண்டியில் தேவையான அளவு நெய் ஊற்றி அதில் முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுக்கவும்.
* இதனை தயாரித்து வைத்துள்ள பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி, நெய் சேர்த்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான ஜவ்வரிசி சர்க்கரை பொங்கல் தயார்.
English Summary
how to make javvarisi sugar pongal