சுவையான வேர்கடலைக் குழம்பு செய்வது எப்படி?
how to make ground nut kuzhambu
சுவையான வேர்கடலைக் குழம்பு செய்வது எப்படி?
தானிய வகைகளில் ஒன்றான வேர்க்கடலையை சுண்டல், சட்னி என்றுதான் சாப்பிடுவார்கள். ஆனால், வேர்க்கடலையை வைத்து குழம்பு வைப்பது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருள்:-
வேர்க்கடலை
காய்ந்த மிளகாய்
கடலை பருப்பு
சாம்பார் பொடி
புளி
எலுமிச்சை பழம்
கடுகு
வெந்தயம்
எண்ணெய்
உப்பு

செய்முறை:
முதலி வேர்க்கடலையை சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அது நன்கு ஊறிய பின்னர் ஒரு வாணலில் வேக வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலை பருப்பு போட்டுத் தாளிக்க வேண்டும். அதனுடன் சாம்பார் பொடி சேர்த்து புளியை கரைத்து ஊற்றி அதனுடன் வேக வைத்த வேர்க்கடலையை போட்டு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
English Summary
how to make ground nut kuzhambu