உணவுப்பழக்கம், உடலுழைப்பு இல்லாததால் ஏற்படும் கருப்பை எண்டோமெட்ரியல் புற்றுநோய்.. தவிர்ப்பது எப்படி?..! - Seithipunal
Seithipunal


இன்றளவில் கருப்பை புற்றுநோய்வாய்ப்படும் பெண்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துவக்கத்திலேயே இதன் அறிகுறிகளை கண்டறியும் பட்சத்தில், எளிமையான முறையில் சிகிச்சை எடுத்து கருப்பை புற்றுநோய் பிரச்சனையை சரி செய்துவிடலாம். 

மாதவிடாய் முடியும் காலங்களில் கருப்பையில் வீக்கம் ஏற்படலாம். 50 வயது முதல் 55 வயதிற்கு உட்பட்ட பெண்களின் கருப்பையில் வீக்கம் ஏற்படலாம். இதனைப்போன்று கருத்தருக்கும் காலங்களில் உள்ள பெண்களின் கருப்பையில் வீக்கம் ஏற்படும். கருப்பையின் உட்பகுதியில் இருக்கும் எண்டோமெட்ரிய செல்கள் அசாதாரண வளர்ச்சியை பெறுகையில், எண்டோமெட்ரியல் புற்றுநோய் ஏற்படும். 

இந்த புற்றுநோய் தாய்மை அடையும் திறனை அழிக்கிறது. மாதவிடாய் சமயங்களில் திடீரென ஏற்படும் இரத்தப்போக்கு அல்லது பிற திரவம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் கூட எண்டோமெட்ரியல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இதன்போது, மருத்துவமனைகளில் சோதனை செய்துகொள்வது சாலச்சிறந்தது. மேலும், மாதவிடாய் நின்ற பின்னர் ஏற்படும் இரத்தப்போக்கு எண்டோமெட்ரியல் புற்றுநோயின் ஆரம்பகட்டமாக இருக்கலாம்.

பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை அதிகளவில் சாப்பிடுதல், உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல், மன ரீதியான அழுத்தத்தை எதிர்கொள்வதில் போன்றவை கூட கருப்பையில் வீக்கம் ஏற்பட காரணமாக அமைகிறது. இதனால் கருத்தரிக்க இயலாத சூழ்நிலை உருவாகிறது. கருப்பையில் ஏற்படும் அழற்சியாலும் இது ஏற்படும். வயிற்றுப்பிடிப்பு, மாதவிடாய் சமயத்தில் அதிக இரத்தப்போக்குடன் ஏற்படும் வலி, அடிவயிறு கனமாக இருப்பது, உடல் பலவீனம், கால் வலி மற்றும் வீக்கம், தாம்பத்தியத்தின் போது ஏற்படும் வலி போன்றதும் கருப்பை அழற்சியின் அறிகுறியாகும்.

கருப்பை ஆரோக்கியத்தை பேணுவதற்கு முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்றவை முக்கியமானது. போதிய உடல் உழைப்பு இல்லாத பட்சத்தில், உடல் பயிற்சி செய்யாமல் இருந்தால் கருப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்கு இரத்தம் செல்லாமல், உடல் இயக்க செயல்பாடு காரணமாக கருப்பை தசைகள் பலவீனமாகிறது. தினசரி குறைந்த பட்சம் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். 

இதனையொன்று எளிமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். யோகா செய்வது நல்ல பலனை தரும். கருப்பை வீக்கத்தை கட்டுக்குள் வைக்க பழச்சாறு மற்றும் காய்கறிகளை சாறுகளாக எடுத்துக்கொள்ளலாம். கருப்பை வீக்கத்திற்கு இவை நிவாரணத்தை தரும். கைப்பிடியளவு வேப்பிலை, சிறிதளவு இஞ்சியை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து காபி போல வாரம் ஒருமுறை பருகி வந்தால் அல்லது இரவு தூங்குவதற்கு முன்னதாக பாலில் ஆளி விதையை சேர்த்து குடித்து வந்தால் நலம். பாதம் பால் அல்லது மஞ்சள் கலந்த பாலை குடிக்கலாம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to Cure Ovarian endometrial cancer Tamil tips


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal