சுவையான அரிசிமாவு போண்டா செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


அரிசி மாவை வைத்து மிகவும் சுவையான போண்டா எப்படி செய்வது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:-

அரிசி மாவு
சீரகம்
பூண்டு 
இஞ்சி 
வேர்கடலை
பச்சைமிளகாய்
வெங்காயம்
கறிவேப்பிலை 
தயிர்
எண்ணெய் 
உப்பு

செய்முறை:-

• ஒரு மிக்ஸியில் சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், வேர்கடலை உள்ளிட்டவற்றை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்து அதனுடன் அரைத்து வைத்திருந்த பொருட்களை போட்டு கைகளால் நன்கு பிசையவும்.

• பின்னர் வெங்காயம், தயிர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு போண்டா பதத்திற்கு பிசைந்து எடுத்து வைக்கவும். இதையடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தயாரித்து வைத்திருந்த போண்டா மாவை எடுத்து சிறு சிறு உருண்டையாக கில்லி போடவும்.

• போண்டா பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து விடவும். அவ்வளவுதான் சுவையான அரிசி மாவு போண்டா ரெடி. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ho to make arisi mavu ponda


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->