கருப்பு மிளகு எண்ணெய்யால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..! - Seithipunal
Seithipunal


சருமத்தை சுதாகவும், தெளிவாகவும் வைத்திருக்க, சருமத்தின் புத்துணர்ச்சி அதிகரிப்பதற்கும் கருப்பு மிளகு எண்ணெய் உதவி செய்கிறது. கருப்பு மிளகு எண்ணெய் உபயோகம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இன்று காணலாம். 

கருப்பு மிளகு எண்ணெயில் உள்ள ஆண்டிவைரல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் அதிகளவு நிறைந்துள்ளது. இது சருமத்தை சுத்தம் செய்து, சருமத்தில் இருக்கும் அழுக்கு மற்றும் பாக்டிரியாக்களை நீக்குகிறது. 

இந்த எண்ணெயில் இருக்கும் ஆண்டிவைரல் காரணமாக சருமத்தில் இருக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்பட்டு, லேசான தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் சரியாகிறது. சிறந்த தோல் சுத்தப்படுத்தியாக இருக்கும் கருப்பு மிளகு எண்ணெயால், அடைக்கப்பட்ட சரும துளைகள் திறக்கப்படும். 

மேலும், சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய், அழுக்கு போன்றவை நீக்கப்படும். முகத்தில் உள்ள இறந்த சரும செல்கள் வெளியேறும். சருமத்தால் வயதான தோற்றம் ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில், அதில் இருந்து மீள கருப்பு மிளகு எண்ணெய் உதவுகிறது. முகத்தின் சுருக்கத்தை சரி செய்கிறது. 

மிருதுவான மற்றும் மென்மையான, இளமையான சரும பிரகாசத்தை தருகிறது. முகத்தை சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தினை மேம்படுத்தி, சரும புத்துணர்ச்சியை வழங்குகிறது. சருமத்தில் உள்ள நச்சுக்களும் கருப்பு மிளகு எண்ணெய்யால் வெளியேறுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Health Benefits of Black Pepper Oil 22 April 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->