தீபத் திருநாளில் துப்பாக்கிச் சத்தம்… சிட்னி ஹனுக்கா விழாவில் 15 பேர் பலி...! - Seithipunal
Seithipunal


யூத மதத்தினரின் முக்கியமான தீபத்திருநாள் பண்டிகையான ஹனுக்கா, ஆண்டுதோறும் 8 நாட்கள் கொண்டாடப்படும் ஒரு ஆன்மிக விழாவாகும். இந்த பண்டிகையின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்றன. அதன்படி, யூதர்கள் தங்கள் இல்லங்களிலும் பொது இடங்களிலும் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி ஹனுக்கா பண்டிகையை கொண்டாடினர்.

இந்த வரிசையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னி நகரின் போண்டி கடற்கரை அருகே, ஹனுக்கா பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிட்னி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான யூதர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில், அந்த கொண்டாட்டம் நடைபெற்ற இடத்திற்கு திடீரென துப்பாக்கியுடன் வந்த இரு பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்த யூதர்களை குறிவைத்து கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தினர். அமைதியான பண்டிகை சூழல், சில நிமிடங்களில் பீதியும் அலறலுமாக மாறியது.

இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை சுற்றிவளைத்து எதிர்த்தனர். இதையடுத்து, துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒரு பயங்கரவாதி காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு பயங்கரவாதி படுகாயமடைந்து கைது செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், ஏற்கனவே 10 பேர் உயிரிழந்திருந்த நிலையில், பின்னர் பலர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. மேலும், 40-க்கும் மேற்பட்டோர் கடுமையாக காயமடைந்து, பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விசாரணையில், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை – மகன் என்பது தெரியவந்துள்ளது.
அவர்கள்:
சஜீத் அக்தர் (50)
அவரது மகன் நவீத் அக்தர் (24)
என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில், சஜீத் அக்தர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். படுகாயமடைந்த அவரது மகன் நவீத் அக்தர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும், சஜீத் அக்தர் ஆஸ்திரேலியாவில் பழக்கடை நடத்தி வந்தவர் என்பதும், இந்த தாக்குதலின் பின்னணி குறித்து பல கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gunfire Festival Lights 15 people killed at Sydney Hanukkah celebration


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->