கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் கபாப்..!
Chicken Kabab Recipe
சிக்கன் கபாபை பெரும்பாலும் கடைகளில் வாங்குவோம். ஆனால், சுவையான கபாப்பை வீட்டிலேயே எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.
தேவையாவனை:
சிக்கன் - 1 கிலோ (துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மைதா - 1/4 கப்

மசாலாவிற்கு :
கிராம்பு - 3
வெங்காய விதை/பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1
பிரியாணி இலை - 1
மிளகு – 5
செய்முறை:
மசாலாவிற்கு கொடுக்கப்ட்ட பொருட்களை வறுத்து பொடி செய்துகொள்ளவும். சிக்கன் துண்டுகளை கீறி வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, குங்குமப்பூ, எலுமிச்சை சாறு, மைதா மற்றும் மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
கிரில் கம்பியை வைத்து அதில் சிக்கனை சொருகி நெருப்பில் வாட்டி எடுத்தால் சுவையான சிக்கன் கபாப் தயார்.