சிவப்பு நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.! - Seithipunal
Seithipunal


பழங்கள் மற்றும் காய்கறியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றின் நிறத்திற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்த வகையில், இன்று சிவப்பு நிறம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டுள்ள சத்துக்கள் குறித்து இனி காணலாம். 

பொதுவாக, சிவப்பு நிறத்தில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆன்டி ஆக்சிடண்டுகள், ஆன்தோசயனின் போன்றவை உள்ளது. இவை சக்திவாய்ந்த நோயெதிர்ப்பு பண்புகளை தன்னகத்தே கொண்டது. இரத்தத்தின் நாளங்கள், மூட்டுகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.

மேலும், இவைகளில் இருக்கும் லைகோபீன் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை கொண்டது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி நிரம்பியிருக்கும் சிவப்பு நிற காய்கறிகள் புற்றுநோய், இதய நோய், கீழ் வாதம் தொடர்பான பாதிப்புகளை குறைகிறது. ஆரோக்கியமான சருமம் மற்றும் உரோமம், நகத்திற்கு இவை முக்கியம் தேவையானதாகும். 

சிவப்புநிற உணவுகளில் உள்ள பொட்டாசியம், இதயத்திற்கு சீரான இரத்தத்தை வழங்குகிறது. உடலின் சீரான இரத்த அழுத்தத்தையும் பராமரிக்கிறது. உடலின் செல்களுக்கு தேவைப்படும் எலக்ட்ரோ லைட்டுகளை வழங்குகிறது. சோடியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களையும் வழங்கி இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. மேலும், ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனையையும் சரி செய்கிறது. 

சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளான தக்காளி, செரிப்பழம், ஆப்பிள், வெங்காயம், ஸ்டாபேரி, மாதுளை, பிளம்ஸ், குடைமிளகாய், சிவப்பு பீன்ஸ், தர்பூசணி போன்ற பல சிவப்பு நிற காய்கறிகள் பழங்கள் உள்ளது. இவற்றை சாப்பிட்டால் மேற்கூறியுள்ள உடல்நல பாதிப்புகளில் இருந்து தப்பித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of Red Color Fruits and Vegetables Tamil


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->