வெயில்லுக்கு இதமாக ஜில்லுனு பாதாம் பால் குடிங்கள்.. எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


வெயிலுக்கு இதமாக பாதாம் பால் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்துவார்கள்.

தேவையானவை:

பாதாம் – ஒரு கைப்பிடி

கெட்டியான பால் – மூன்று கப்,
ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்,
சர்க்கரை – 100 கிராம்,
குங்குமப்பூ – சிறிதளவு.

செய்முறை:

ஒரு கைப்பிடி அளவு பாதாம் பருப்பை இரவில் ஊறவைத்து கொள்ளுங்கள். சூடான தண்ணீரில் பாதாம் பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து தோலை உரித்து கொள்ளுங்கள். இதனை மிக்சியில் அரைத்து கொள்ளுங்கள்.

பாலை கொதிக்கவைத்து கொள்ளுங்கள். பால் கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள பாதாம் பாலை அதில் சேர்த்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான் அளவு சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள்.

அதனுடன் குங்குமப்பூ சேர்த்து கொள்ளுங்கள்.  அதில் ஏலக்காய் தூளை சேர்த்து கொள்ளுங்கள். பாதாம் பால் கெட்டியான பதத்திற்கு நன்கு கொதித்து வரும் பொழுது அடுப்பை அணைத்து பொடித்த நட்ஸ் தூவி நன்கு ஆற வைத்து பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Badam Milk Recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->