இளம்பெண்ணை கற்பழித்து கொடூரமாக கொன்ற வாலிபர்..! ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்...! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் இளம் பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கேரள மாநிலம் படூர் பகுதியை சேர்ந்தவர் முகமது அஷ்ரப் (33). இவர் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பலேபுனி பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது முகமது அஷ்ரப் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.

பின்பு இளம் பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை தீவைத்து எரித்துள்ளார். இதையடுத்து முகமது அஷ்ரப் வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து போலஸார் தலைமறைவாக இருந்த முகமது அஷ்ரப்பை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை மங்களூரு ஆறாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த முகமது அஷ்ரபுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth who raped and killed a young girl was sentenced to life imprisonment in Karnataka


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->