சிறுத்தையுடன் சண்டையிட்டு கால்களைக் கட்டி தூக்கி வந்த இளைஞரால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள பாகிவாலு கிராமத்தைச் சேர்ந்த முத்து என்ற இளைஞர் நேற்று தனது பண்ணைக்குச் சென்று வேலை முடிந்த பிறகு வீட்டுக்கு திரும்பி உள்ளார். அப்பொழுது அருகே இருந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை அவரை தாக்க முயன்றுள்ளது. 

முதலில் அவர் சிறுத்தையை விரட்ட முயன்று உள்ளார். ஆனால் அது அவரை ஆக்ரோஷமாக தாக்கியுள்ளது. இதனால் சாமர்த்தியமாக சிறுத்தையுடன் சண்டையிட்டு மடக்கிப் பிடித்துள்ளார். அதைக் கொல்ல மனமில்லாத முத்து சிறுத்தையின் கால்களை தான் வைத்திருந்த கயிற்றால் கட்டி தனது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்துள்ளார்.

இதனைக் கண்ட கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சிறுத்தை தாக்க முயன்ற சம்பவம் குறித்து ஊர் மக்களிடம் தெரிவித்த முத்து வனத்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த முத்துவுக்கு கிராம மக்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

சிறுத்தைக்கும் காயம் ஏற்பட்டதால் வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு முதலுதவி அளித்தனர். தன்னை தாக்க வந்த சிறுத்தையை கொல்லாமல் உயிருடன் கட்டி தூக்கி வந்த இளைஞரை கிராம மக்களும், வனத்துறையினரும் வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth fighting with leopard after tried legs in Karnataka


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->