கொடூர காதலனை நம்பி சென்ற பெண்...10 பேர் கூட்டாக...?
woman who trusted her cruel boyfriend 10 people together
தெலுங்கானா ஜங்கான் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த 23 வயதான முகமது ஒவைசி என்பவரும் காதலித்து வந்தார்கள். இந்நிலையில், முகமது ஒவைசி தனது காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்க முடிவு செய்து, கடந்த மாதம் அப்பெண்ணை நேர்ல பார்க்க தனியாக வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நடக்கபோவதை அறியாமல் காதலன் ஆசையாய் கூப்பிட்டதும் வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது.அங்கு முகமது ஒவைசி கார் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் தனது நண்பர்களான சிவக்குமார்,சாய்ராம், நுகலா ரவி, பவன்குமார்,அப்துல் கியூம், பூஜா சமந்த் ரெட்டி, சாய் சரண் ரெட்டி, ஜெட்டி சஞ்சய் ஆகியோருடன் தயாராக இருந்தார்.
அங்கு வந்த காதலியை காரில் ஏற்றிக்கொண்டு ஜன்கனிலுள்ள லாட்ஜ்க்கு அழைத்து சென்றனர். அந்த லாட்ஜ்ல் இளம்பெண்ணை மிரட்டை ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த விஷயத்தை வெளியில் யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டி அனுப்பி வைத்தனர்.
அதன் படி கேட்டுக்கொண்ட அந்த பெண்ணை சம்பவம் நடந்த சில தினங்களுக்கு பின்னர் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் வந்து காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அவரும் இளம்பெண்ணை கோவாவுக்கு அழைத்து சென்று அறை எடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதன் பிறகு இளம்பெண்ணை அவரது சொந்த ஊரில் விட்டு தப்பி சென்றார்.இது குறித்து இளம்பெண் தனது சகோதரியிடம் தெரிவித்ததைத்தொடர்ந்து, சகோதரி காவலில் புகாரளித்தார்.மேலும், காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர். மேலும் விசாரணையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியான நிலையில்,காவலர்கள் இதில் ஈடுபட்ட 10 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
woman who trusted her cruel boyfriend 10 people together