விமானத்தில் இருக்கை கேட்டு அரை நிர்வாணத்தில் நடமாடிய பெண்.! - Seithipunal
Seithipunal


விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான யுகே 256 என்ற விமானம் பயணிகளுடன் அபுதாபியிலிருந்து மும்பை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இத்தாலியைச் சேர்ந்த பாவ்லோ பெருசியோ என்ற பெண் தகராறு செய்தார். 

அந்த பெண் விமானத்தில் எகானமி பிரிவில் பயணம் செய்வதற்கு பயணசீட்டு வாங்கி இருந்தார். ஆனால், திடீரென பிசினஸ் வகுப்பில் இருக்கை தர கோரி, அரை நிர்வாணமாக விமானத்தில் அங்குமிங்கும் அலைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

இந்தச் சம்பவம் குறித்து விஸ்தாரா விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது,  "விஸ்தாரா விமான நிறுவனம் தனது பயணிகளின் பாதுகாப்பிற்கு   இடையூறு ஏற்படுவதை பொறுத்துக் கொள்ளாது.

அதேபோல் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தவறாது. அதனால் சம்பவம் குறித்த தகவல் கிடைத்த உடனேயே விமானி உடனடியாக பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் அளித்து விட்டார். 

அதன் பின்னர், விமானம் தரையிறங்கியதும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அவர் பரிந்துரை செய்தார். அதன் படி, சம்பவம் தொடர்பாக எங்கள் நிறுவனம் முறையாக அறிக்கையும் வெளியிட்டுள்ளது" என்றுத் தெரிவித்தார்.

இதையடுத்து விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விமான பணிக் குழு சம்பந்தப்பட்ட பெண் பயணி மீது புகார் அளித்தது. அந்த புகாரின் அடிப்படையில், அந்த பெண் பயணி கைது செய்யப்பட்டார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman walk semi naked in vistara uk 256 flight


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?



Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?




Seithipunal