பணம் நகைக்காக 08 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்; 09வது நபரை திருமணம் செய்ய இருந்த நிலையில் கைது; நூதன திருட்டில் ஈடுப்பட்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!
Woman Arrested in Maharashtra for Marrying Eight Men for Money and Jewelry and Planning to Marry a Ninth
மகாராஷ்டிரா மாநிலத்தின் 35 வயதுடைய இளம்பெண் ஒருவர் புரோக்கர்கள் உதவியுடன் பல்வேறு மாவட்டங்களில் ஒன்பது ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து ஏமாற்றி வந்துள்ள நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக, பெண் கிடைக்காத கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து இந்த பெண்ணுடன் சேர்ந்த கும்பல் வியூகம் அமைத்து இளைஞர்களிடம் கைவரிசை காட்டியுள்ளது. ஏற்கனவே நடந்த 08 திருமணங்களில், திருமணமான ஒரே வாரத்தில் வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை சுருட்டிக்கொண்டு அந்த பெண் தலைமறைவாவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.
இவ்வாறு ஏமாற்றி திருமணம் செய்து 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை ரொக்கப்பணம் மற்றும் ஏராளமான தங்க நகைகளை அந்த பெண் மற்றும் அவரது கூட்டாளிகள் திருடியுள்ளனர். அதாவது ஒவ்வொரு திருமணத்தின் போதும் இவரது உறவினர்கள் போல நடித்தவர்கள் பணம் கொடுத்து அமர்த்தப்பட்ட போலி நபர்கள் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் உமாபூர் கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை 09வது முறையாக திருமணம் செய்ய முயன்ற போது, அந்த பெண்ணின் முன்னுக்குப் பின் முரணான பேச்சால் மணமகன் வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து,நேற்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அந்த பெண்ணிடம் முறையான அடையாள அட்டைகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அந்த பெண்ணை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஏஜெண்டுகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனையடுத்து, 'மணப்பெண்ணின் ஆதார் விபரங்கள் மற்றும் குடும்ப பின்னணியை முறையாக சரிபார்த்த பின்னரே திருமணங்களை செய்ய வேண்டும்'. என்று பீட் மாவட்ட போலீசார் தற்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Woman Arrested in Maharashtra for Marrying Eight Men for Money and Jewelry and Planning to Marry a Ninth