மறுதேர்தல் அறிவிப்பு; 'உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், ஃபால்டாவில் போட்டியிடுங்கள்'; பாஜகவிற்கு சவால் விடுத்துள்ள அபிஷேக் பானர்ஜி..!
With the announcement of a re election in Falta Abhishek Banerjee issues a challenge to the BJP
தேர்தல் முறைகேடு நடந்ததாக கூறி, மேற்கு வங்க மாநிலத்தில் டைமண்ட் ஹார்பர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல்தா சட்டசபை தொகுதியில், மறுதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவிற்கு அபிஷேக் பானர்ஜி கடும் சவால் விடுத்துள்ளார்.
மேற்கு பக்கத்தில் கடந்த 23-ஆம் தேதி, முதற்கட்டமாகவும், 29-ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற்றது. அப்போது டைமண்ட் ஹார்பர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல்தா சட்டசபை தொகுதியில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக வேட்பாளரின் சின்னத்தை கருப்பு நிற டேப் மற்றும் மை கொண்டு மறைத்து முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அதன்படி அங்கு மொத்தம் உள்ள 285 வாக்குச்சாவடிகளில் 60 மையங்களில் இதுபோன்ற விதிமீறல்கள் நடந்ததாகவும், 53 ஆயிரத்து 967 வாக்காளர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், தேர்தல் நடைமுறையில் முறைகேடு நடந்ததை உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்தா தொகுதிக்கு மட்டும் மே 21-ஆம் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் என்றும், அதன் முடிவுகள் மே 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஒரு தொகுதிக்கு முழுமையாக மறுதேர்தல் நடப்பது மேற்கு வங்க வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, டைமண்ட் ஹார்பர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், கூறியுள்ளதாவது;
'எனது டைமண்ட் ஹார்பர் வியூகத்தை அசைத்துப் பார்க்க உங்கள் மேற்குவங்க எதிர்ப்பு குஜராத்தி கும்பலுக்கும், அவர்களின் ஏஜென்டாகச் செயல்படும் ஞானேஷ் குமாருக்கும் (தலைமை தேர்தல் ஆணையர்) 10 ஜென்மங்கள் எடுத்தாலும் முடியாது. உங்களின் மொத்த சக்தியையும் திரட்டி வாருங்கள். ஒன்றிய அரசிற்கே சவால் விடுகிறேன், நேராக பல்தாவிற்கு வாருங்கள்.
டெல்லியில் இருக்கும் உங்கள் பலமான தலைவர்களை அங்கு போட்டியிடச் சொல்லுங்கள். உங்களுக்குத் தைரியம் இருந்தால் ஃபல்தா தொகுதியில் களமிறங்குங்கள்’ என்று ஆவேசமாகச் பதிவிட்டுள்ளார்.
இந்த சூழலில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கானின் கூட்டாளிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
With the announcement of a re election in Falta Abhishek Banerjee issues a challenge to the BJP