பிகினி மற்றும் பெண்கள் ஆடைகளுடன் திருநங்கை வேடத்தில் ஆபாச வீடியோ வெளியிட்ட டாக்டர்: மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு..!
Wife alleges scandal over doctor who posted video of himself posing as a transgender in bikini and women clothing
உத்தரப் பிரதேச மாநிலம் சாந்த் கபீர் நகரில் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிபவர் வருணேஷ் துபே. இவர் மருத்துவமனையில் அரசு குடியிருப்பு இல்லத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் மீது அவரது மனைவி சிம்பி பாண்டே திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை போலீசில் முன்வைத்து புகாரளித்துள்ளார். அதாவது ‘அவருடைய கணவர் பெண் அணியும் ஆடைகள் மற்றும் பிகினி உடைகளை அணிந்து கொண்டும், திருநங்கையாக வேடமிட்டு ஆபாச வீடியோக்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் என்றும், அந்த வீடியோக்கள் அவர் தங்கியிருக்கும் அரசு குடியிருப்பில் பதிவு செய்யப்பட்டவை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த வீடியோவில் இருந்த மோதிரம், திரைச்சீலைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள், நான் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து எடுத்து சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், சமூக வலைதளங்களில் அவரது திருநங்கை வீடியோ வைரலான பிறகு தான் தனக்கு இது பற்றி தெரியும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விஷயம் குறித்து தனது கணவரிடம் கேட்ட போது, அவர் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். ஆக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், டாக்டர் வருணேஷ் துபே, தன் மீது தனது மனைவி கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘எனது மனைவி காட்டும் வீடியோக்கள் 'டீப்ஃபேக்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்றும், தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், எனது மனைவியின் குடும்பத்தினர் செய்துள்ள சதி வேலை இது என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, காவல்துறை இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, டாக்டரின் அரசு குடியிருப்பு இல்லத்தை சீல் வைத்து விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன், மாவட்ட ஆட்சியர், விசாரணைக் குழுவை அமைத்து, மேற்கண்ட புகார்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். பாலியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பிரச்னைகளில் டிஜிட்டல் மோசடிகள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
English Summary
Wife alleges scandal over doctor who posted video of himself posing as a transgender in bikini and women clothing