அவர் மீண்டும் மீண்டும் கூறுவது நாட்டுக்கு அவமானகரமானது..கார்கே சொல்கிறார்!
What he keeps saying is shameful for the country says Karke
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தலையீட்டால் மட் டுமே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக 24 முறை கூறியுள்ளார். அவர் மீண்டும் மீண்டும் கூறுவது நாட்டுக்கு அவமானகரமானது என மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
பாராளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.அப்போது மேல் சபையில் எதிர்கட்சி தலை வரும், காங்கிரஸ் தலைவரு மான மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விதி 267-ன் கீழ் நான் நோட்டீஸ் அளித்துள்ளேன்.என்ன நடந்தது என்பதை அரசு எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இன்றுவரை தீவிரவாதிகள் பிடிக்கப்படவில்லை அல்லது சுட்டுக் கொல்லப்படவில்லை.
உளவுத்துறை தோல்வியடைந்ததாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் அறிக்கையை வெளியிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தலையீட்டால் மட் டுமே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக 24 முறை கூறியுள்ளார். அவர் மீண்டும் மீண்டும் கூறுவது நாட்டுக்கு அவமானகரமானது.இவ்வாறு மல்லிகார் ஜூன கார்கே பேசினார்.

இதற்கு பதில் அளித்து பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ஜே.பி.நட்டா கூறும் போது, 'இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது.எந்தவொரு விவாதத்தில் இருந்தும் ஓடிப் போக மாட்டோம்' என்றார்.இதையடுத்து பஹல்காம் தீவிரவாத தாக்குதல், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்து தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்ககோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
English Summary
What he keeps saying is shameful for the country says Karke