சிறுமியிடம் முத்தம் கேட்ட கிளீனர்..தனியார் பஸ்சில் நடந்தது என்ன?
What happened on the private bus where the cleaner asked the girl for a kiss?
சிறுமியிடம் முத்தம் கேட்ட கிளீனரை சிறுமியின் குடும்பத்தினர் நடுரோட்டில் அரை நிர்வாணப்படுத்தி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் வசிக்கும் தம்பதியின் 16 வயது மகள் ஐதராபாத்தில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்றிருந்தாள். அங்கிருந்து நேற்றுமுன்தினம் இரவு தனியார் பஸ்சில் பெங்களூருவுக்கு சிறுமி புறப்பட்டு வந்தாள். ஐதராபாத்தில் இருந்து சிறுமி தனியாக அந்த பஸ்சில் பயணம் செய்தாள். அந்த பஸ்சில் ஒருவர் டிரைவராகவும், மற்றொருவர் கிளீனர் மற்றும் பகுதி நேர டிரைவராகவும் இருந்துள்ளனர்.
சிறுமி தனியாக வந்ததை அறிந்துகொண்ட கிளீனர் ஜன்னலில் உள்ள துணியை மூடும் போது சிறுமியின் உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி தாயிடம் செல்போன்னில் சிறுமி கூறினாள். அதன்பிறகு, செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. இதையடுத்து, டிரைவரிடம் செல்போனை சார்ஜ் போடுவதற்காக சிறுமி கொடுத்தாள்.
சார்ஜ் ஆனதும் செல்போனை சிறுமி எடுக்க சென்ற போது கிளீனர், செல்போன் வேண்டும் என்றால், தனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று பல முறை கூறி கட்டாயப்படுத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பின்னர் , நடந்த சம்பவங்கள் குறித்து தன்னுடைய குடும்பத்தினரிடன் தெரிவித்ததையடுத்து , உறவினர்கள் தனியார் பஸ் வந்ததும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனரை சுற்றி வளைத்து பிடித்து நடுரோட்டில் வைத்து அவரின் ஆடைகளை கிழித்து எறிந்து அரை நிர்வாணப்படுத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விதானசவுதா போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் கிளீனரை கைது செய்து விசாரித்தனர். அவர் பெயர் ஆரிப் கான் என்று தெரிந்தது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது.
English Summary
What happened on the private bus where the cleaner asked the girl for a kiss?