நாய் போல் குரைத்து மனு அளித்த சாமானியன்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலம் பங்குரா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்தி தத்தா என்பவர் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ளார். இதனை அடுத்து அரசு சார்பில் அவருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. ஆனால் அரசு சார்பில் வழங்கப்பட்ட ரேஷன் கார்டில் ஸ்ரீகாந்தி தத்தா என்பதற்கு பதில் ஸ்ரீகாந்தி குத்தா என தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது. குத்தா என்றால் இந்தி மொழியில் நாய் என்று அர்த்தம். 

இதனைத் தொடர்ந்து அவர் ரேஷன் கார்டில் பெயர் திருத்தம் செய்ய விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் அவர் விண்ணப்பத்தின் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பலமுறை இதற்காக பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ஸ்ரீகாந்தி தத்தா சம்பந்தப்பட்ட அதிகாரி காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது வழிமறித்து ரேஷன் கார்டில் தனது பெயர் தவறாக இருப்பதை திருத்திக் கொடுக்க வேண்டும் என நாய் போல் குரைத்து வித்தியாசமான முறையில் மீண்டும் கோரிக்கை மனு அளித்தார்.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான அதிகாரி அங்கிருந்து செல்ல முயன்ற போது அவரை விடாமல் ஸ்ரீகாந்தி தத்தா தடுத்து நிறுத்தினார். கடைசி வரை அந்த அதிகாரியிடம் வாய் திறந்து பேசாமல் குறைத்துபடியே நின்றிருந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஸ்ரீகாந்தி கூறுகையில் "ரேஷன் கார்டில் தத்தாவுக்கு பதில் குத்தா என பெயர் இருந்தது திருத்தம் செய்ய மூன்று முறை விண்ணப்பித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். தற்பொழுது நான் மீண்டும் விண்ணப்பம் செய்ய சென்றபோது சம்பந்தப்பட்ட இணை பிடிஓ வந்தார். இதனைத் தொடர்ந்து நாய் போல் குரைத்து அவரிடம் கோரிக்கை மனு அளித்தேன். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் பெயர் திருத்துவதற்காக எத்தனை நாட்கள் வேலையை விட்டு அலைய முடியும்" என கேள்வி எழுப்பினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal man barked like dog for refused to correct name in ration card


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->