பா.ஜ.க - திரிணாமுல் ஆதரவாளர்கள் திடீர் மோதல்: நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal



மேற்கு வங்கம், கூச் பெஹார் மாவட்டத்தில் பா.ஜ.க மற்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஏற்பட மோதலில் போலீசார் உள்பட பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

கூச் பெஹார் மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றதில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கலந்து கொண்டு பேசினார். 

இந்த கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அம்மாநில அமைச்சர் தலைமையில் பேரணி தொடங்கப்பட்டது. 

அப்போது பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரவு 8:30 மணி அளவில் ஏற்பட்ட இந்த மோதல் சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்த மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த தாக்குதலில் போலீசார் உட்பட பலரும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

West Bengal BJP Trinamool Supporters Clash 


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->