மகிழ்ச்சியில் தொடங்கிய திருமணம்...சில மணிநேரங்களில் கோர விபத்து...! - பேருந்து-லாரி மோதலில் 6 பேர் பலி...!
wedding that started happily terrible accident few hours 6 people killed bus lorry collision
உத்தரபிரதேச மாநிலம் ஹம்பூர் மாவட்டத்தில் மகிழ்ச்சியால் மலர்ந்த திருமண விழா, சில மணி நேரங்களிலேயே துயரத்தின் நிழலில் மூழ்கியது. திருமண நிகழ்வு நிறைவடைந்த பின், மணமகன் குடும்பத்தினர் பேருந்தில் சொந்த ஊர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டிருந்தனர்.இந்நிலையில், ஹம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயணம் தொடர்ந்துகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த லாரியுடன் கடுமையாக மோதியது.

இந்த கொடூர விபத்தில் மணமகனின் தந்தை யூனிஸ் குரேஷி, பேருந்து ஓட்டுநர் அசோக் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 10-க்கும் அதிகமானோர் தீவிர காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்ற காவலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.மேலும், இந்த விபத்திற்கான காரணங்களை உறுதிப்படுத்தும் வகையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
wedding that started happily terrible accident few hours 6 people killed bus lorry collision