காதலனுடன் சென்ற இளம்பெண்...நீதிமன்றத்தில் அனுமதி...! ஆனால் வெளியே குடும்பத்தினர் மோதல்! - 6 பேர் கைது - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண், கடந்த 3ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் குடும்பத்தினருக்கு பதற்றம் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் எதுவும் கிடைக்காததால், பெற்றோர் முக்கம் காவலர்களிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் காவலர்கள் தீவிரமாக மேற்கொண்ட விசாரணையில், காணாமல் போன இளம்பெண் தாமரைச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞருடன் காதலில் ஈடுபட்டு, அவருடன் பதிவு திருமணம் செய்து கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து இருவரையும் காவலர்கள் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பான அறிக்கை தாமரைச்சேரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தில், இளம்பெண் தன் விருப்பப்படி காதலனுடன் வாழ வேண்டும் என தெளிவாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், திருமண வயதை கடந்தவர் என்பதையும் கருத்தில் கொண்டு, அவரது விருப்பத்திற்கிணங்க காதலனுடன் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, காதலன் தனது மனைவியை அழைத்துச் செல்ல முயன்றபோது, இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காதலன் மற்றும் அவரது நண்பர்கள் இடையே வாக்குவாதம் வெடித்து, பின்னர் அது தள்ளுமுள்ளு மோதலாக மாறியது.நீதிமன்ற வளாகத்திலேயே இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்து காவலர்கள் மேலான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young woman who went her boyfriend allowed court But outside family clash 6 people arrested


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->