அறியாத நம்பர்களின் தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி...! - வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு அம்சம் வைரல்...! - Seithipunal
Seithipunal


மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் வாட்ஸ்அப், உலகளவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் முன்னணி சமூக தொடர்பு செயலிகளில் ஒன்றாக திகழ்கிறது.

இந்தியாவில் மட்டும் 51 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த செயலியை தினசரி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள இந்த தளத்தில், பயனர்களின் பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்தும் நோக்கில் மெட்டா தொடர்ந்து புதிய அம்சங்களையும் மேம்பாடுகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தேவையற்ற அழைப்புகளால் ஏற்படும் தொந்தரவுகளை கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய வசதி வாட்ஸ்அப்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அம்சம் பலருக்கு இன்னும் முழுமையாக அறிமுகமாகவில்லை".

அறியப்படாத அழைப்பாளர்களை அமைதிப்படுத்து” என்ற இந்த சிறப்பம்சத்தை செயல்படுத்தினால், உங்கள் தொடர்புப் பட்டியலில் சேமிக்கப்படாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் தானாகவே அமைதியாக்கப்படும்.

இதன் மூலம் தேவையற்ற அழைப்புகளின் இடையூறுகளில் இருந்து உடனடியாக விடுபட முடியும்.இந்த அம்சம் செயல்படும் விதம் மிகவும் எளிமையானது.

வாட்ஸ்அப் அமைப்புகளில் உள்ள இந்த விருப்பத்தை இயக்கியவுடன், அறியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் உங்கள் கைப்பேசியில் ஒலி எழுப்பாது. அவை அமைதியான முறையில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் நீங்கள் கால் வரலாற்றை பார்த்து அவற்றை அறிந்து கொள்ளலாம்.

இதனால், வேலை நேரங்களிலும் ஓய்வு தருணங்களிலும் எந்த வித இடையூறும் இன்றி அமைதியாக இருக்க முடியும். பயனர்களின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி வடிவமைக்கப்பட்ட இந்த அம்சம், தேவையற்ற தொந்தரவுகளை குறைக்கும் சிறந்த தீர்வாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Put end hassle unknown numbers WhatsApp new security feature goes viral


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->