சென்னையில் இலவச எலும்பியல் முகாம்...! 130க்கும் மேற்பட்டோர் பயன்பெற்று ஆரோக்கிய விழிப்புணர்வு உயர்வு...! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள எம்.என். ஆர்த்தோபெடிக் மருத்துவமனை மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையமான மித்ரா இணைந்து, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இலவச எலும்பியல் சிகிச்சை முகாமை சிறப்பாக நடத்தியது.இந்த முகாம் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில் டாக்டர்கள் ஆர்.எம். அழகப்பன், கார்த்தி சுந்தர், எம்.டி. குமார், பிரகாஷ் உள்ளிட்ட நிபுணர்கள் கொண்ட மருத்துவக் குழு பங்கேற்று, நோயாளிகளுக்கு முழுமையான பரிசோதனைகளை மேற்கொண்டது.

மேலும், முகாமில் 130-க்கும் அதிகமான பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு பயனடைந்தனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், எக்ஸ்-ரே பரிசோதனை, எலும்பு அடர்த்தி மதிப்பீடு உள்ளிட்ட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், தேவையான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன என தெரிவிக்கப்படுகின்றது.இந்த முகாம் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியாக பாராட்டைப் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Free orthopedic camp Chennai More than 130 people benefited and health awareness increased


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->