குடியரசு தலைவரை உருவ கேலி செய்து சர்ச்சையில் சிக்கியுள்ள மேற்குவங்க அமைச்சர்! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மீன்வளத்துறை அமைச்சர் அகில் கிரி குடியரசு தலைவரை உருவ கேலி செய்த சர்ச்சையில் சிக்கி உள்ளார். மேற்குவங்க எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில் கிரி குடியரசுத் தலைவரை உருவ வேலை செய்துள்ளார். 

அந்த நிகழ்ச்சியில் பேசிய அகில் கிரி " சுரேந்து அதிகாரி என்னை ஆப் பேமென்ட் அமைச்சர் என அழைப்பார். நான் ஆப் பேமென்ட் அமைச்சர் என்றால் அவருடைய தந்தை எப்படி இருந்திருப்பார். என்னை பொறுத்தவரை நான் சிறந்தவன் என்னை மிஞ்சிய அமைச்சர் இருப்பதாக கருதவே மாட்டேன். எனது உருவம் சரியில்லை என சுரேந்து அதிகாரி கூறுகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்பது மக்களுக்கான கட்சி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தோற்றத்தின் அடிப்படையில் யாரையும் எடை போடாது. உங்கள் ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்த கேள்வி எழுப்பும் பொழுது அருகில் இருந்த சிலர் சிரித்தனர், இது தொடர்பான வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. குடியரசு தலைவரை அகில் கிரி அவமானத்தை செய்து விட்டார். உடனடியாக அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக போர் கொடி உயர்த்தி உள்ளது. 

மேற்கு வங்க பாஜக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஜனாதிபதி திரௌபதி முர்மு பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் அவர் பற்றி அமைச்சர் அகில் கிரி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உள்ளார். இதற்கு முன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மற்றும் உதித்ராஜ் ஆகியோர் ஜனாதிபதி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினர். இருவரும் மன்னிப்பு கேட்டது போல் இவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோட திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WB Minister caught in controversy for mocking the President


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->