விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே மோதல்.. 13 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கோலாகலமுடன் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் பல இடங்களில் நடந்து வருகின்றன.

இந்த சிலைகளை பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். அவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில், குஜராத்தின் வதோதரா நகரில் பானிகேட் பகுதியில், விநாயகர் பூஜை ஊர்வலம் ஒன்று நடந்தது.

இதில், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும், இந்த விவகாரம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vinayagar chathurthi clash 13 people arrested


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->