'நான் இறந்து விடுவேன்.. என் அம்மாவிடம் செல்ல வேண்டும்': சவுதியில் கதறும் இந்தியரின் வீடியோ: உண்மை என்ன..? - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நபர் தனது விருப்பத்துக்கு எதிராக சவுதி அரேபியாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை காப்பாற்ற வேண்டும் எனக் கதறி அழும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த நபரை இந்தியத் தூதரகம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக பின்பற்றப்பட்டு வந்த கபாலா என்ற நடைமுறையை 50 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியா கைவிட்டுள்ளது. இந்நிலையிலேயே, தொழிலாளி ஒருவர் கதறும் அழும் வீடியோ ஒன்றை டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில் போஜ்புரி மொழியில் பேசும் அந்த தொழிலாளி, 'எனது கிராமம் அலகாபாத்தில் உள்ளது. நான் சவுதி அரேபியாவுக்கு வந்தேன். ஸ்பான்சரிடம் எனது பாஸ்போர்ட் உள்ளது. நான் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன், ஆனால், அவர் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இந்த வீடியோவைப் பகிருங்கள், அதிகமாகப் பகிருங்கள், உங்கள் ஆதரவுடன் இந்தியாவிலிருந்து உதவி பெற்று மீண்டும் இந்தியாவுக்கு வர முடியும். நீங்கள் முஸ்லிம், இந்து அல்லது யாராக இருந்தாலும் - சகோதரரே, நீங்கள் எங்கிருந்தாலும்- தயவுசெய்து உதவுங்கள். தயவுசெய்து எனக்கு உதவுங்கள், நான் இறந்துவிடுவேன். நான் என் அம்மாவிடம் செல்ல வேண்டும். பிரதமர் மோடியின் கவனத்தை அடையும் வரை இந்த வீடியோவை பகிருங்கள்' என கதறும் அழும் வீடியோ நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

இந்த வீடியோவை வெளியிட்ட வழக்கறிஞர்; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இந்தியத் தூதரகத்தின் கவனத்துக்கும் வந்துள்ளது.

இது தொடர்பாக இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'அந்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அந்த நபர் சவுதி அரேபியாவில் எங்கு இருக்கிறார். மொபைல் எண் உள்ளிட்டவற்றை பகிராததால் அவரை கண்டுபிடிப்பது சிரமம்'எனத் தெரிவித்துள்ளது. ஆனால், சவுதி பாதுகாப்புத் துறை கூறுகையில், 'அந்த நபரின் கூற்றுகளை ஆதாரமற்றது, பார்வையாளர்களை அதிகரிக்கும் நோக்கத்துடன் இது வெளியிடப்பட்டது' என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Video of Indian man screaming in Saudi Arabia that he will die


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->