திருமணத்திற்கு வந்த அமைச்சரின் மூக்கை உடைத்த மர்ம கும்பல். உ.பியில் பரபரப்பு.!!
Uttar Pradesh Minister attacked by miscreants
மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேச அமைச்சர் மீது மர்ம கும்ப கும்பல் கொடூர தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் பாஜக தலைமையிலான அரசின் அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவருடைய மகன் பிரவீன் நிஷாத் ஷாந்த் கபீர் நகர் தொகுதி பாஜக சிட்டிங் என்பியாக இருந்து வரும் நிலையில் முகமது க்ஷபூர் கதார் கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிலர் பிரவீன் நிஷாத் இடம் தொகுதி பக்கமே வருவதில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றி திடீரென கைப் கலப்பாக மாறியுள்ளது. இது அமைச்சர் சஞ்சய் நிஷாத்தை சிலர் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் சஞ்சய் நிஷாத்தின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டவே அவரை பாதுகாவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது

தன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஞ்சய் நிஷாத் மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர் திருமண நிகழ்ச்சியில் சிலர் நிஷாத் கட்சியை விமர்சனம் செய்த போது அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர். அப்போது சிலர் சாதிய மோதலை தூண்டும் விதமாக செயல்பட்டு என்னை தாக்கினர் என தெரிவித்துள்ளார்.
சஞ்சய் நிஷாத்தின் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின் பேரில் முகமது போர் கராமத்தைச் சேர்ந்த 8 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 4 பேரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
English Summary
Uttar Pradesh Minister attacked by miscreants