இந்திய ராணுவத்திற்கு 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க மத்திய அமைச்சகம் ஒப்புதல்.!
Union ministry approves to indian militry for one twenty ballistic missiles purchase
கடந்த சில நாட்களாகவே இந்தியா மற்றும் சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்குவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஏவுகணைகள் கூடிய விரைவில் தயாரிக்கப்பட்டு இந்திய மற்றும் சீன எல்லையில் தயார் நிலையில் நிறுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது. தயாரிக்கப்பட்ட நாட்டிலிருந்து மற்றொரு நாட்டை தாக்கக்கூடிய புதிய தலைமுறை 'பிரளய்' ஏவுகணை 150 முதல் 500 கி.மீ. தூரம் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடியது.

இது இந்திய உந்துவிசை ஏவுகணை திட்டத்தின் கீழ், பிருத்வி ஏவுகணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இது அதிநவீன மோட்டார் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டது. சமீபத்தில், கடற்படை தளபதி ஹரி குமார் பேசும் போது தெரிவித்ததாவது ,
"எல்லையில் எதிரிகளை எதிர்கொள்வதற்கு ஏவுகணைகளை பெருமளவில் தயாரித்து தயார் நிலையில் வைப்பதற்கு மறைந்த முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறப்புத் திட்டமே உருவாக்கியிருந்ததாக சுட்டிக் காட்டியிருந்தார்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில்,120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
English Summary
Union ministry approves to indian militry for one twenty ballistic missiles purchase