சோகம்... மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு.!!
two peoples died for lightning attack in telungana
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள, மேடக் மாவட்டம் படலப் பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். இவரது நண்பர்கள் யஷ்வந்த், ரவிக்கிரண் உள்ளிட்டோர் நேற்று புறநகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தவர்கள் அருகிலுள்ள மாம்பழத் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் பிரசாத், யஷ்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரவிகிரண் படுகாயமடைந்து மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரவிக்கிரனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், இதேபோன்று காமிரெட்டி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் தனது நண்பருடன் நேற்று ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் இடி தாக்கியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மின்னல் தாக்கி வெவ்வேறு இடங்களில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two peoples died for lightning attack in telungana