சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை - சோதனையில் சிக்கிய நைஜீரியர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை - சோதனையில் சிக்கிய நைஜீரியர்கள் கைது.!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள், பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். 

இந்த நிலையில், பெங்களூரு உளிமாவு பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சோதனை நடத்தினர். 

அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் விதமாக சுற்றிய இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் நைஜீரியாவை சேர்ந்த இம்மானுவேல் மற்றும் உச்சென்னா லிவினுஸ் என்பது தெரிய வந்தது. 

மேலும், அவர்கள் 2 பேரும் பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி வாட்ஸ்-அப்பில் குழு அமைத்து அதன் மூலம் ஆர்டர்கள் பெற்று போதைப்பொருட்களை வினியோகம் செய்தது தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், அவர்களது பாஸ்போர்ட்டு, செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two nigerians arrested for drugs sales in banglore


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->