கனமழை எதிரொலி - 2 நாட்களுக்கு பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை.!!
two days school and colleges close in kolkatta for rain
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் கனமழை பெய்ததன் காரணமாக நகரின் பல பகுதிகள் முழங்கால் அளவு நீரில் மூழ்கி போக்குவரத்து அதிகளவில் பாதிக்கப்பட்டது.
பல வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கொல்கத்தாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மேற்கு வங்க மாநிலத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளன.
பயணிகள் தங்கள் பயணங்களை அதற்கேற்ப திட்டமிட வேண்டும். விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு, பயணிகள் தங்கள் விமான நிலையை விமான நிறுவனத்தின் செயலி அல்லது வலைதளம் மூலம் தவறாமல் சரிபார்க்க வேண்டும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் என்று இரு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
English Summary
two days school and colleges close in kolkatta for rain