ஒரே தொகுதியில் 2 முறை வாக்குப்பதிவு - அட்டவணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ள இந்தத் தேர்தலுக்கு வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும் ஜூன் மாதம் 1ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் அட்டவணையும் வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள் இருக்கும் நிலையில், கூடுதலாக ஒரு தொகுதி சேர்க்கப்பட்டு 544 தொகுதிகள் உள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர் தெரிவித்ததாவது:- "அனைத்து தொகுதியிலும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மணிப்பூர் தொகுதிக்கு மட்டும் இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மணிப்பூரில் மொத்தம் 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில், மணிப்பூர் தொகுதிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. 

ஆனால், அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும் ஏப்ரல் 26ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. சுராசந்த்பூர் மற்றும் சந்தேல் மாவட்டங்கள் முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவுக்கு செல்கிறது. குக்கி மற்றும் மெய்தேய் சமூக மக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை இந்த இரண்டு மாவட்டங்களை நிலைகுலைய வைத்தது.

அவுட்டர் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நடந்து வரும் இனக்கலவரத்தை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two days election at one constituency in manipur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->