கேரளா : ரெயிலில் 24 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


கேரளா : ரெயிலில் 24 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்.!

நமது அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், பாலக்காடு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சூரஜ்குமார் தலைமையிலான போலீஸார் சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது யஸ்வந்த்பூர்-கண்ணூர் விரைவு ரயிலில் ஒரு வடமாநில பயணி சந்தேகம் படும்படியாக இருந்தார்.

இதையடுத்து ரயில்வே போலீஸார் அந்த வாலிபரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அந்த வாலிபர் மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டம், கும்பாரி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்கோலி என்பதும், அந்த நபர் ரொக்கப் பணமாக 24 லட்சம் ரூபாய் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் அந்த வாலிபரிடம் இல்லை. அதனால், போலீஸார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர் கோழிக்கோடு மாவட்டம், கொடுவள்ளி பகுதியில் தங்கநகை வாங்கச் செல்வதாக தெரிவித்தார்.

இருப்பினும், அதற்குரிய முகவரி உள்ளிட்ட தகவல்களும் அவரிடம் இல்லை. இந்த நிலையில், இது ஹவாலா பணம் என்று போலீஸார் சந்தேகித்து அந்த வாலிபரைக் கைது செய்து வருமான வரித்துறை விசாரணை பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty four lakhs hawala money seized in kerala


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->