பிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் பரிதாப பலி.. சோகத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா நாகமங்களா தேசிய நெருஞ்சலையில் கார் ஒன்று டிராக்டரின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், காரில் பயணம் செய்த பெண்மணி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். 

இதனைக்கண்டு வந்த அப்பகுதி மக்கள், காரில் இருந்த மூவரையும் மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மீதமுள்ள இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், விபத்தில் சிக்கிய பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணையில், பலியான பெண்மணி கன்னட சின்னத்திரை நடிகை மற்றும் மாடல் அழகி மேபினோ மைக்கேல் (வயது 22) என்பதும், இவரது சொந்த ஊராக குடகு மாவட்டத்தில் இருக்கும் சோமவார்பேட்டை என்பதும் தெரியவந்துள்ளது. 

இவர் பெங்களூரில் இருந்து மாண்டியா வழியாக 2 நண்பருடன் காரில் சென்ற நிலையில், இந்த விபத்து அரங்கேறியுள்ளது. மேபினோ மைக்கேல் கன்னட தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றியாளர் எனதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து மற்றும் மேபினோ மைக்கேல் மறைவு திரையுலகினர், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View this post on Instagram

Veni , vidi , veci bitch

A post shared by Mebiena Micheal (@mebiena_micheal) on

View this post on Instagram

Do ya thing b !🌸

A post shared by Mebiena Micheal (@mebiena_micheal) on

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tv Serial Actress Mebiena Micheal died in car accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal