இந்தியா-ரஷியா வர்த்தக உறவுக்கு டிரம்ப் அதிருப்தி..நாங்கள் நன்றாகப் பழகுகிறோம் என புலம்புல்!
Trump expresses dissatisfaction with India Russia trade relations We are getting along well he laments
நாங்கள் இந்தியாவுடன் நன்றாகப் பழகுகிறோம். ஆனால், பல ஆண்டுகளாக, அது ஒருதலைப்பட்ச உறவாக இருக்கிறது. இந்தியா எங்களிடம் மிகப்பெரிய வரிகளை வசூலித்து வருகிறது என டிரம்ப் கூறினார் .
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சந்தித்தது அமெரிக்காவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவரோ, “மோடி ரஷியா–சீனாவுடன் நெருக்கமாக இருப்பது கவலைக்கிடமானது. இந்தியா ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்” என்றார்.
இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “இந்தியா எங்களிடம் அதிக வரி வசூலிக்கிறது, ஆனால் அமெரிக்காவிலிருந்து குறைவாகவே இறக்குமதி செய்கிறது. பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்ச உறவாகவே உள்ளது. இந்தியா பெரும்பாலும் ரஷியாவிலிருந்து எண்ணெய், ராணுவப் பொருட்களை வாங்குகிறது” எனக் கூறினார்.உலகிலேயே அதிகமான வரி விதிக்கும் நாடு இந்தியாதான். ஆனால் அதை மறுத்து வருகிறது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் ராணுவப் பொருட்களை ரஷியாவிலிருந்து தான் பெரும் அளவு வாங்குகிறது. அமெரிக்காவிலிருந்து அது மிகக் குறைவு. அவர்கள் இப்போது தங்கள் வரிகளை ஒன்றுமில்லாமல் குறைக்க முன்வந்துள்ளனர், ஆனால் அது தாமதமாகிவிட்டது. அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அதைச் செய்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
English Summary
Trump expresses dissatisfaction with India Russia trade relations We are getting along well he laments