தண்டவாளத்தில் ஓடிய சரக்கு ரெயில் - ஓட்டுநர் உள்பட 6 பேர் இடைநீக்கம்.!.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் கதுவா ஸ்டேஷன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த ரெயில் ஓட்டுநர் ஹேண்ட் பிரேக் போடாமல் என்ஜினில் இருந்து கீழே இறங்கினார். 

ரெயில் நின்ற தண்டவாள பாதையும் சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.

சுமார் 80 கி.மீ. தூரம் வரை ஓடிய அந்த சரக்கு ரெயில் பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

அதில், சம்பந்தப்பட்ட என்ஜின் ஓட்டுநர் அலட்சியமாக செயல்பட்டதே இந்தச் சம்பவத்திற்கு காரணம் என்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ரெயில்வே நிர்வாகம் என்ஜின் ஓட்டுநர் சந்தீப்குமார் உள்பட 6 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train run without driver in jammu kashmir


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->