160 கி.மீ வேகத்தின் விபரீதம்… பெங்களூரு இளைஞர்கள் 6 பேர் பலி...! - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
tragedy160 kmph speed 6 Bengaluru youths killed Shocking information revealed investigation
பெங்களூருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அயன் அலி, தனது நண்பர்களான அஷ்ரம் ஷெரீஃப், ஏத்தன் ஜார்ஜ், அஷ்வின் நாயர், பரத் மற்றும் முகமது ஃபர்ஹான் ஆகியோருடன் அதிகாலை 5 மணியளவில் ஹொசக்கோட்டையிலிருந்து தேவனஹள்ளி நோக்கி காரில் பயணம் மேற்கொண்டார்.

இளம் வயது உற்சாகத்தில் வேகமாக பாய்ந்த அந்த கார், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் பயணித்த ககன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அதன் பின்னரும் வேகம் குறையாமல் சென்ற கார், முன்னால் சென்ற சரக்கு வாகனத்திலும் மோதி விபத்தைக் கூடுதலாக தீவிரப்படுத்தியது.
இந்த மோதலில் சரக்கு வாகன ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் கடுமையாக காயமடைந்தார். மணிக்கு 160–170 கி.மீ. வேகத்தில் கட்டுப்பாடின்றி பாய்ந்த காரின் தாக்கத்தில் சரக்கு வாகனத்தின் சக்கரங்கள் சிதறி, எதிரே வந்த வாகனங்களையும் தாக்கியதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டன.
மேலும் இரண்டு வாகனங்கள் சேதமடைந்து நான்கு பேர் காயமடைந்தனர்.இறுதியில் அயன் அலி ஓட்டிய எக்ஸ்யூவி 700 கார் முற்றிலும் நொறுங்கி சிதிலமாக மாறியது. காரில் இருந்த ஆறு பேரும் உயிரிழந்தனர்.
மேலும், காவலர்கள் நடத்திய விசாரணையில், அதிக வேகமே இந்த பேரழிவுக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் 10-ம் வகுப்பு மாணவர்கள் என்பது சம்பவத்தின் சோகத்தை இன்னும் அதிகரித்துள்ளது.
English Summary
tragedy160 kmph speed 6 Bengaluru youths killed Shocking information revealed investigation