போக்குவரத்து விதிமீறல்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு அபராதம் விதிப்பு! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மீது போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் பொருத்தப்பட்டுள்ள புதிய புலனாய்வு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ITMS) கேமராக்கள், 2024 முதல் இதுவரை சித்தராமையா மொத்தம் 7 முறை போக்குவரத்து விதிகளை மீறியதை பதிவு செய்துள்ளன.

அவற்றில்:6 முறை, அவர் தனது வாகனத்தின் முன் இருக்கையில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணியாமல் இருந்தது பதிவாகியுள்ளது.மேலும் ஒரு முறை, வாகனம் அதிவேகத்தில் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மீறல்கள் அனைத்தும் நகரின் முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, முதல்வருக்கு மொத்தம் ₹5,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் கர்நாடக அரசு அறிமுகப்படுத்திய 50% அபராத தள்ளுபடி திட்டத்தின் காரணமாக, சித்தராமையா ₹2,500 மட்டும் செலுத்தியதாக போக்குவரத்து துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம், "சட்டம் அனைவருக்கும் சமம்" என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் விதமாக கர்நாடக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Traffic violation Karnataka Chief Minister Siddaramaiah fined


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->