பண்டிகை கால வியாபாரம் கடும் பாதிப்பு; போராட்டத்தைக் கைவிடவேண்டும்; ராகுல்காந்திக்கு வணிகர்கள் கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


தலைமைத் தேர்தல் ஆணையர்ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் (எதிர்க்கட்சியினர்) மேற்கொண்டுவரும் போராட்டத்தால் பண்டிகை கால வணிகம் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உடனடியாக ராகுல் காந்தி போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டெல்லி உள்ளிட்ட முக்கிய தலைநகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால், போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் ஆங்காங்கே தடுப்புகளை அமைப்பது, சாலையில் செல்ல கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற நடவடிக்கை உள்ளது. இதனால்,  நவராத்திரி, தசரா, தீபாவளி என அடுத்தடுத்து வரும் பண்டிகை கால விற்பனையை பெருமளவு பாதிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறி, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்நிலையில் 30 ஆண்டுகாலமாக போராட்டம் நடந்த ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமல்ல என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் மேலும், வலுவடைந்துள்ளது. முன்னதாக, நாடாளுமன்றத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி காங்கிரஸ் கட்சி பேரணியாக ஈடுபட்டதோடு, உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று மனு அளித்தனர்.

இந்த போராட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள் மட்டுமின்றி இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய தேசிய மாணவர் அமைப்பு என பல இயக்கங்களும் பங்கேற்றனர்.

இப்போராட்டத்தால் விழாக்காலத்தையொட்டி நடைபெறும் வணிகம் கடுமையாக பாதிப்பதால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வணிகர்களின் கோர்க்கையாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Traders urge Rahul Gandhi to call off the protest citing severe impact on festive season business


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->