அபிஜீத் தீப்கே உள்ளிட்ட சிஜேபியினர் கைதுக்கு ராகுல் காந்தி கண்டனம்! கரப்பான்பூச்சியுடன் காங்கிரஸ் கைகோர்ப்பு..? - Seithipunal
Seithipunal


கரப்பான் பூச்சிகள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, அஷுதோஷ் ரன்கா, செளரவ் தாஸ் ஆகியோரை காவல் துறை கைது செய்தமைக்கு  ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இனிமேல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை என மத்திய அரசு அறிவித்தது. கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்தும் இடமாகத் இருந்த ஜந்தர் மந்தர் இருந்துள்ளது.

ஜந்தர் மந்தருக்கு மாற்றாக கிழக்கு தில்லியில் மூன்று இடங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அவை தொலைவாகவும், எளிதில் சென்று சேர முடியாத போக்குவரத்து வசதிகளைக் கொண்டதாகவும் இருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசின் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், டெல்லி ஜந்தர் மந்தருக்குள் போராட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ள நிலையில், அந்த தடையை மீறி சுவர் ஏறிக் குதித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது, சிஜேபி நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா, அஜிங்கியா ஆகியோர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 05 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவும் கைது செய்யப்பட்டு பின்னர் அவரின் பாட்டியின் மரணத்தை அடுத்து நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகளின் கைது நடவடிக்கைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும் தனியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

தற்போது அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளதால், சிஜேபி உடன் காங்கிரஸ் கட்சி இணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi condemns Abhijit Dipkes arrest


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->