தக்காளியின் பாதுகாப்புக்கு கடையில் கண்காணிப்பு கேமரா! - Seithipunal
Seithipunal


நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் அதிர வைக்கும் விலை உயர்வு காரணமாக தக்காளி பேசும் பொருளாக மாறி உள்ளது. ஆப்பிள், மாதுளை பழங்களுக்கு ஈடாக தக்காளியும் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்வதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் அக்கிஅலுரு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவர் ஒரு விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார்.

அவரது கடையில் தக்காளியை விற்பனை செய்வதால், தக்காளி திருடு போவாமல் இருக்க கிருஷ்ணப்பா, தனது கடையில் திருட்டை தடுக்கும் வகையில் தக்காளி பெட்டியில்  கண்காணிப்பு கேமரா ஒன்றை பொறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ''தற்போது தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும், அத்தியாவசிய பொருள் என்பதால் அதை வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் தக்காளியை திருடுவதற்காக ஒரு தனி கூட்டம் சுற்றுகிறது. வாடிக்கையாளர்கள் சிலர் மேலும் கூடுதல் தக்காளி கொடுக்குமாறு தகராறு செய்கிறார்கள். இது போன்ற பிரச்சினையால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் கண்காணிப்பு கேமரா பொறுத்தியுள்ளேன்'' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomato security surveillance camera


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->