உச்சம் தொட்ட தக்காளி விலை - மத்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தக்காளியை கொள்முதல் செய்து மற்ற மாநிலங்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே தக்காளி வரத்து குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

பல இடங்களில் தக்காளி கிடைப்பதேஇல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மண்டிகளிலிருந்து உடனடியாக தக்காளியை கொள்முதல் செய்யுமாறு தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் கொள்முதல் செய்யப்படும் தக்காளிகளை கடந்த ஒரு மாதமாக அதிக விலையில் விற்கப்படும் பகுதிகளுக்கு அனுப்பிவைத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமைக்குள் நுகர்வோருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிராவின் நாசிக்கிலிருந்து விரைவில் புதிதாக தக்காளி வந்தடையும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனவே இனி தக்காளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomato prices hit a peak Central government orders procurement from Maharashtra


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->