தக்காளி காய்ச்சல் அறிகுறி, தடுப்பது எப்படி? மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விடுத்த சுற்றிக்கை.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் பரவியுள்ள தக்காளி காய்ச்சல் நோய் கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவ வாய்ப்பு உள்ளதாக புவனேஸ்வர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதனை தொடர்ந்து தக்காளி காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது,

"நாடு முழுதும் 82-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் நோய் பரவியுள்ளது. இந்த தக்காளி காய்ச்சல் நோய் பெரும்பாலும் 1 முதல் 10 வயதுடைய குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள முதியவர்களை பாதிக்கிறது. 

காய்ச்சல், சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, உடலில் அரிப்பு, தடிப்புகள், மூட்டுகளில் வலி,  உள்ளிட்டவை தக்காளி காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் ஆகும். 

நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க மேற்கண்ட அறிகுறிகள் தோன்றியதிலிருந்து பாதிக்கப்பட்டவர் 5 முதல் 7 நாட்களுக்குப் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதற்கு சிகிச்சையளிக்க குறிப்பிட்ட மருந்துகள் இல்லை.

சுகாதாரத்தை கடைப்பிடித்தல் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்டவை சிறந்த தடுப்பு முறை ஆகும். இந்த வைரஸ் தொற்று குரங்கு அம்மை, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவுடன் தொடர்புடையது அல்ல". என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomato flu symptoms how to prevent


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->