இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த திரு.பிங்கலி வெங்கய்யா அவர்கள் நினைவு தினம்!.
Today is the remembrance day of Mr Pingali Venkayya who designed the Indian national flag
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த திரு.பிங்கலி வெங்கய்யா அவர்கள் நினைவு தினம்!.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யா 1876ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் பிறந்தார்.
இவர் வைரச் சுரங்கம் தோண்டுவதிலும், பருத்தி ஆராய்ச்சியிலும் சாதனை படைத்ததால் 'வைரம் வெங்கய்யா' மற்றும் 'பருத்தி வெங்கய்யா' என்றும் அழைக்கப்பட்டார்.
கல்கத்தாவில் 1906-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஆங்கிலேய அரசின் யூனியன் ஜாக் கொடி ஏற்றதை பார்த்து நம் நாட்டிற்கும் கொடி வடிவமைப்பது குறித்து காக்கிநாடாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் சந்திப்பின்போது, வலியுறுத்தினார்.
காந்தி, கொடியை வடிவமைக்கும் பொறுப்பை இவரிடமே ஒப்படைத்தார். பல நாடுகளின் கொடிகளை ஆராய்ச்சி செய்து விஜயவாடா தேசிய மாநாட்டின்போது சிவப்பு, பச்சை நிறங்கள் கொண்ட கொடியை வெங்கய்யா அறிமுகப்படுத்தினார்.

கொடியில் அசோக சக்கரத்தை சேர்க்கலாம் என்று ஜலந்தரை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் என்பவர் ஆலோசனை கூறினார். அமைதியைக் குறிக்கும் வெண்மை நிறத்தை சேர்க்கலாம் என்று காந்திஜி கூற, மூவர்ணங்கள் கொண்ட தேசியக் கொடியை வெங்கய்யா வடிவமைத்தார்.
கராச்சியில் 1931-ல் நடந்த அகில இந்திய மாநாட்டில் இந்தக் கொடியை அனைவரும் ஒருமனதாக ஏற்றனர். முதலில் கொடியின் நடுவில் ராட்டை இருந்தது. பிறகு அதற்கு பதிலாக அசோக சக்கரம் சேர்க்கப்பட்டது.
நாட்டின் முன்னேற்றத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட பிங்கலி வெங்கய்யா 86வது வயதில் 1963 சூலை 4 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
Today is the remembrance day of Mr Pingali Venkayya who designed the Indian national flag