ஜல்லிக்கட்டு போட்டி காண உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு! - Seithipunal
Seithipunal


ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றிய ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு வெறும் கேளிக்கை விளையாட்டு அல்ல. அது தமிழர் பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் இணைந்த ஒன்று என தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும் ஜல்லிக்கட்டு மாடுகள் துன்புறுத்தப்படுவதில்லை. ஸ்பெயின் நாட்டில் இருப்பது போல் காளைகளை கொல்வது தமிழகத்தின் வழக்கம் கிடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை மாடுபிடி வீரர்கள் குடும்ப உறவாகவே கருதுகின்றனர். ஜல்லிக்கட்டு காளைகளை வருமானம் ஈட்டும் விலங்குகள் அல்ல.

ஜல்லிக்கட்டு காளை மாடுகள் இனப்பெருத்திற்காக பயன்படுத்துகின்றன. இதன் மூலம் நாட்டு மாடுகளின் இனத்தை பாதுகாக்க வழிவகை செய்கிறது. வரும் பொங்கலுக்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரவேண்டும் என தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt invites supreme court judges to watch jallikattu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->