ஓவர் செலவு... டிக்டாக் மோகம்.. கணவன் துடிதுடிக்க அரங்கேற்றிய சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் பிரகாசம் காணகிரி மண்டல் பகுதியைச் சேர்ந்த பாசகாசம் என்பவர் டெய்லராக இருக்கின்றார். இவருக்கு பாத்திமா என்ற பெண்ணுடன் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்துள்ளது. பாத்திமா பஞ்சாயத்து அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில், திருமணம் ஆன நாள் முதலே பாத்திமா அதிக செலவு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களாக டிக்டாக் செயலிக்கு பாத்திமா அடிமையாக இருந்துள்ளார்.

அவர் வேலைக்கு செல்லும் இடத்திலும், வீட்டில் இருக்கும் பொழுதும் டிக் டாக் வீடியோக்கள் வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். குடும்பத்தை சரியாக கவனித்துக் கொள்ளாமல், எப்பொழுதும் மேக்கப் செய்வது, டிக் டோக் வீடியோ எடுப்பது என்று அதற்கே அதிகப்படியான செலவுகளை செய்து வந்துள்ளார்.

இதன் காரணமாக அவரது கணவர் கோபம் கொண்டு டிக்டாக்வீடியோ வெளியிடக்கூடாது என கண்டித்துள்ளார். இருப்பினும் பாத்திமா அதனை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்ததன் காரணமாக ஆத்திரமடைந்த கணவர் சப்பாத்தி கட்டையால் பாத்திமா தலையில் ஓங்கி அடிக்க அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக பயந்துபோய் பாத்திமாவின் கணவர், பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடி உள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தற்போது காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tiktok video wife murder


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal