குடியரசு தினத்தை சீர்குலைக்க சதித்திட்டம்.. நாள் முழுவதும் நடந்த துப்பாக்கிச் சண்டை...!!   - Seithipunal
Seithipunal


ம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. அப்போது, ஜெய்ஷே முகமது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும், கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவனான காரி யாசிர் என்பவன், முன்னர் நடந்த புல்வாமா தாக்குதலின் போது 40 ராணுவ வீரர்களைக் கொன்ற புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவன் என்று ராணுவத்தினர் தெரிவித்தார்கள்.

குடியரசு தினமான இன்று காஷ்மீரில் தாக்குதல் தொடுக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக ரகசிய தகவல் ஒன்று வந்தது. இதை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளின் மறைவிடத்தை சுற்றி வளைததனர். நாள் முழுவதும் இருதரப்பிலும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இறுதியாக மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three terrorist shot dead


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal