திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் நிறுத்தி வைப்பு.!!
three days special dharisanam ticket stop in tirupathi
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாதத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு தரிசனம், விரைவு தரிசனம் என்று பல்வேறு வழிகள் ஏற்படுத்தப்பட்டது. அதில், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஒவ்வொரு மாதமும் 24 அல்லது 25 உள்ளிட்ட தேதிகளில் தொடங்கி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
இந்த நாளில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாதவர்கள் ரூ.300 சிறப்பு தரிசன வரிசையில் சென்று, சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்கு மற்றொரு வழியும் உள்ளது. இந்த நிலையில், திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"நிர்வாக காரணங்களுக்காக, டிசம்பர் 29, 30, 31 உள்ளிட்ட மூன்று தேதிகளில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு நிறுத்தி வைக்கப்படுகிறது. இருப்பினும், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு தரிசன டிக்கெட் பற்றிய மறு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
English Summary
three days special dharisanam ticket stop in tirupathi