7 அம்ச கோரிக்கைகள்... அரசு போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்!  - Seithipunal
Seithipunal



திருவள்ளூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. 

சிஐடியூ காஞ்சிபுரம் மண்டல துணை தலைவர் மாயக்கண்ணன் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் திருவள்ளூர் முன்னாள் நகர மன்ற தலைவர் சிஐடியூ மாவட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணபலம், போக்குவரத்து படி, மருத்துவ காப்பீடு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். 

வாரிசு வேலை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. 

இதில் கோயம்பேடு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur govt transport employees hunger strike


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->